ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 12:56 pm

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அண்மையில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்