ஜனாதிபதி அஹிம்சை வழியில் செயற்படுகின்றார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி அஹிம்சை வழியில் செயற்படுகின்றார் – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 7:17 pm

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பேருவளையில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

மார்ச் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலத்தை 15 ஆம் திகதி வரை நீடித்தோம். எனினும் அவர்களின் நிர்வாக நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.

மேலும் நாம் கொடுக்கும் சலுகைகளை இவர்கள் இயலாமையாக கருதுகின்றனர் எனினும் அவ்வாறு இல்லை. மனிதாபிமானத்திற்காகவே இவற்றை செய்கின்றோம். பண்டாரநாயக்கவையும் இவ்வாறு தான் எண்ணினார்கள் குண்டர்கள் சாயலுடைய தலைவர்களே எமது நாட்டு மக்களுக்கு தேவை ஆனால் எமது ஜனாதிபதி அனைவருக்கும் செவிசாய்த்து அஹிம்சையாக செயற்படுகின்றார். அவருக்கும் முதுகெலும்பு இல்லை என கூறுகின்றனர். அவர் மிகவும் சிறந்த வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றார் என இதன் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்