கோட்டை நகர சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு

கோட்டை நகர சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு

கோட்டை நகர சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 2:53 pm

கோட்டை நகர சபையின் தலைவர் ஜனக ரணவக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுகத் அப்புஹாமி ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் தொடர்பான வழக்கு இன்று (11) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர், எதிர்க்கட்சி தலைவரை தாக்கியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் நகர சபைத் தலைவரை தாக்கியதாகவும் இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் இன்று (11) நீதிமன்றத்தில் அறிவித்தனர்

கோட்டை நகர சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலான லேதிக விசாரணை ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்