கோட்டாபய ராஜபக்ஸ  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்

கோட்டாபய ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்

கோட்டாபய ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 8:14 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (11) அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடாத்துவதற்காக அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (11) அழைக்கப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (11) முற்பகல் வருகைத் தந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர், நண்பகல் அங்கிருந்து வெளியேறியிருந்த போதிலும், பிற்பகல் அங்கு மீண்டும் வருகைத் தந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்யும் நிலை காணப்பட்டமையினால், அதனை தடுக்கும் வகையில் இன்று (11) உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமாஅதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 44 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

குறித்த மனு இன்றைய தினத்திலேயே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய வழக்கு பட்டியலில் இந்த வழக்கு இன்மையால் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்