கற்பிட்டி கடற்பரப்பின் வனப்பு – நியூஸ்பெஸ்ட் குழுவினரின் தொகுப்பு(Watch Video)

கற்பிட்டி கடற்பரப்பின் வனப்பு – நியூஸ்பெஸ்ட் குழுவினரின் தொகுப்பு(Watch Video)

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 10:22 am

இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் காணப்படும் எழில்மிகு பிரதேசமே கற்பிட்டியாகும். இதன் அழகுக்கு மேலும் மெருகூட்டும் டொல்பின் மீன்களும், சுறாக்களும் காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

இயற்கை அழகை அதிகம் விரும்பிய இலங்கையரான மார்டின்ஸ்டைன் தனது வாழ்நாளில் பெரும்பாலான காலப்பகுதியை சுறாக்கள் மற்றும் டொல்பின்கள் குறித்த விசேட ஆய்வுகளுக்குப் செலவிட்டார்.

இலங்கையிலுள்ள சுறாக்கள் மற்றும் டொல்பின்கள் தொடர்பில் தனது ஆய்வில் கண்டறிந்த விடயங்களை புத்தகமாக எழுதியும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, நியூஸ் பெஸ்ட் குழுவினர் கற்பிட்டி கடற்பரப்பிற்கு விஜயம்செய்து, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது பல வகையான சுறாக்களையும், டொல்பின்களையும் எமது குழுவினரால் காணமுடிந்தது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள நாட்டின் உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த அரிய உயிரினங்கள், அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை மறுக்கமுடியாத ஒரு விடயமாகும்.

இந்தப் பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் டொல்பின்கள் உயிர்வாழ்வதற்கான சூழல் சமனிலை பெரிதும் குழப்பப்படுகின்றது.

இந்த வளங்களை பாதுகாப்பதற்கு நாம் தவறும்பட்சத்தில், எதிர்கால சந்ததியினர் கடலில் அலைகளை மாத்திரம் காணக்கூடியதாக இருக்கும்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்