அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானம்

அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 7:45 pm

லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியினால் கடன் வழங்குவதற்காக ரவி கருணாநாயக்க பட்டியல் அனுப்பியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து தனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு பில்லியன் நட்டஈடு கோரி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து

[quote]2000 மில்லியன் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு எனது சட்டதரணிகளுக்கு நான் கூறியுள்ளேன். இல்லை என்றால்இவை கோமாளித்தனமாகிவிடும்[/quote]

இதே வேளை , சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் நோக்கில் கடந்த அரசாங்கம் அநாவசியமான முறையில் செயற்பட்டதாக, ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியின் தலைவர் கே.எச்.லசந்த குணவர்தன தெரிவித்த கருத்து

[quote]வழங்கப்பட்ட பெருந்தொகையான கடன்கள் அறவிடமுடியாத கடன்களாக மதிக்கப்பட்டுள்ளன. 1600 மில்லியனுக்கும் அதிகமான தொகை எம்மால் மீண்டும் பெற்று கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிதி விசாரணையை முன்னெடுத்தோம்[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்