அமைதியின்மையை தோற்றுவித்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அமைதியின்மையை தோற்றுவித்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அமைதியின்மையை தோற்றுவித்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 5:37 pm

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் இடம்பெற்ற எதிர்ப்பின்போது, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கைதான இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்குமுன்னர் கைதான மாணவர்கள் இருவரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு ஒலிபெருக்கி பொருத்திய முச்சக்கர வண்டியுடன் வருகைதந்ததாக கூறப்படும் சாரதியும் இன்று (11) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்