மலேசியாவிலிருந்து  இலங்கை நோக்கி புறப்பட்ட விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம்

மலேசியாவிலிருந்து  இலங்கை நோக்கி புறப்பட்ட விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம்

மலேசியாவிலிருந்து  இலங்கை நோக்கி புறப்பட்ட விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2015 | 12:17 pm

மலேசியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணத்தை ஆரம்பித்த, மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மலாக்கா நீரினைப் பகுதிக்கு மேலாக இரண்டு மணித்தியாலம் பறக்கவிடப்பட்டதன் பின்னரே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிகளவு எண்ணெய்யுடன் விமானத்தை சடுதியாக தரையிறக்குவது ஆபத்தானது என்பதால் விமானிகள் இரண்டு மணித்தியாலமாக விமானத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு 11.30 அளவில் பயணத்தை ஆரம்பித்த விமானம் இன்று (10) அதிகாலை 1.30 அளவில் எவ்வித பாதிப்பும் இன்றி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விமானம் தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எம்.எச். 179 என்ற மலேசிய விமானம் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்