பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் நாளை முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்

பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் நாளை முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்

பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் நாளை முதல் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2015 | 1:43 pm

பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகளை பெற்றுள்ள மாணவர்கள் நாளை (10) முதல் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கைநூல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விண்ணப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை 24,000 இற்கும்  மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க எண்ணியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்