நாடளாவிய ரீதியில் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

07 May, 2015 | 8:15 am

நாடளாவிய ரீதியில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

விசேட வைத்திய நிபுணர்களுக்கு வருடாந்தம் மூன்றுமாத விடுமுறை வழங்கி, தனியார் பிரிவு வைத்தியசாலைகளில் முழுமையாக பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் நலிந்த ஹேரத் கூறினார்.

அரச வைத்தியசாலைகளின் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய திட்டமிடலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் நிபுணர்கள் பிரபல தனியார் வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதாக நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

தமது யோசனைக்கு சுகாதார அமைச்சிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், விசேட வைத்திய நிபுணர்களுக்கான பயிற்சிகளை அதிகளவிலானவர்களுக்கு வழங்குதன் மூலம், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்