வார்த்தையிழந்த பின்னும் நம்பிக்கையுடன் வாழ்க்கை மட்டும் தொடர்கிறது!

வார்த்தையிழந்த பின்னும் நம்பிக்கையுடன் வாழ்க்கை மட்டும் தொடர்கிறது!

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 9:10 pm

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டைப்பறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமிப்பிள்ளை.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் 2006 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து அகதியாக வாழ்ந்தார்.

யுத்தத்தின் கோரத்துக்கு மத்தியில் 2006 ஆம் ஆண்டில் சிவகாமிப்பிள்ளையின் கணவர் காணாமற்போனார்.

அந்தப் பேரதிர்ச்சி சிவாகாமிப்பிள்ளையை ஊமையாக்கிவிட்டது.

மீளக்குடியமர வந்த சிவகாமிப்பிள்ளையின் குடும்பத்திற்கு அவர்களின் சொந்த இடங்களில் தகரக்கொட்டிலே உறையுளாய் காட்சி கொடுத்தது.

இரண்டாவது மகளின் கணவருடைய நாட்கூலியே சிவகாமிப்பிள்ளையின் குடும்பத்தாரின் வயிற்றுப் பசியைப் போக்க இன்றுவரை உதவுகின்றது.

8 வருடங்கள் கடந்த நிலையிலும் தன்னுடைய கணவர் திரும்பிவருவார் என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார் 70 வயதுடைய சிவகாமிப்பிள்ளை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்