வடமாகாணத்தில் தேசிய சரணாலயங்கள் அமைக்கத் திட்டம்

வடமாகாணத்தில் தேசிய சரணாலயங்கள் அமைக்கத் திட்டம்

வடமாகாணத்தில் தேசிய சரணாலயங்கள் அமைக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 7:44 am

வடமாகாணத்திலுள்ள சில காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சுன்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள காடுகளையே தேசிய சரணாலயங்களாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க கூறியுள்ளார்.

தேசிய சரணாலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே புதிய சாரணாலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர பருவக்காலங்களில் இந்தியாவில் இருந்து வரும் பறவைகள் முதலில் தங்குகின்ற இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதற்கமைய தலைமன்னாரை அண்மித்த மணல் திட்டுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சரணாலயங்களை உருவாக்குவதன் மூலம் வன விலங்குகளை பாதுகாக்கும் அதேவேளை, சுற்றுலா துறையின் ஊடாக மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்