மீண்டும் பொலிஸ் அதிகாரியாக கமல்ஹாசன்

மீண்டும் பொலிஸ் அதிகாரியாக கமல்ஹாசன்

மீண்டும் பொலிஸ் அதிகாரியாக கமல்ஹாசன்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 10:29 am

கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

விஸ்வரூபம்–2,பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன, 2 படங்களும் அனைத்து வேலைகளும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.

தற்போது கமலின் அடுத்த படத்துக்கு ‘ஒரே இரவு’ என்று பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் ராஜாவுக்கு பிறகு இந்த படத்தில் கமலுடன் இணைகிறார் பிரகாஷ் ராஜ், இந்த படத்துக்கு ஒரே இரவு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ள புதிய படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார்.

கமலே தயாரிக்கிறார் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது.

தெலுங்கு-தமிழில் தயாராகும் இந்த படத்தில் கமல்ஹாசன் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு ஸ்டைலான திரில்லர் படமாக உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 2-வது, 3-வது வாரத்தில் தொடங்வுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் காட்சிகள் மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படுவதாகவும் சில இடங்களை கமல்ஹாசன் தேர்வு செய்து வைத்து இருந்தார்.

ஆனால் தற்போது சில பிரச்சினைகள் காரணமாக இந்தியாவிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என தகவல் கூறுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்