தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் ஜே.ஸ்ரீரங்கா

தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் ஜே.ஸ்ரீரங்கா

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 7:09 pm

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.

நுவரெலியா ஐக்கிய தொழிற்சங்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தொழிற்சங்க தோட்டத் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் மக்கள் மயப்படுத்துவதும் தொழிற்சங்கங்களின் கடமை என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தொழிற்சங்க தலைவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தின் பல பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபங்களை மக்களுக்குக் கையளிக்கும் விடயம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு பல கோடி ரூபா செலவில் கலாசார மண்டபங்களையும், தோட்டங்களுக்கான வீதிகளையும் மேலும் பல வசதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா செய்து கொடுத்துள்ளமையை தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்