தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் உதய கம்பன்பிலவிடம் விசாரணை

தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் உதய கம்பன்பிலவிடம் விசாரணை

தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் உதய கம்பன்பிலவிடம் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 8:15 pm

தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட நால்வரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று விசாரணை செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கடந்த 23 ஆம் திகதி சிறுபான்மை அடையாளங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இதன்போது விசாரிக்கப்பட்டுள்ளது.

லலித் எல்லாவல மற்றும் பிரதீப் உதுகொட ஆகிய மாகாண சபை உறுப்பினர்களும் இவர்களில் அடங்குகின்றனர்.

உதய கம்மன்பிலவுடன் மாகாண சபை உறுப்பினர்களான லலித் எல்லாவல, பிரதீப் உதுகொட மற்றும் பாடகர் மதுமாடவ அரவிந்த ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்