தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது நிதி மோசடி: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது நிதி மோசடி: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 9:05 pm

2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளின் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

சில அபிவிருத்தித் திட்டங்களுக்காக 13 கோடி ரூபா நிதி ஒதுக்கி, அவற்றைத் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டின் ஊடாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்