தண்ணீர் போத்தல்களில் அடைத்து கொக்கட்டூஸ் பறவைகளைக் கடத்த முயன்றவர் கைது (Photos)

தண்ணீர் போத்தல்களில் அடைத்து கொக்கட்டூஸ் பறவைகளைக் கடத்த முயன்றவர் கைது (Photos)

தண்ணீர் போத்தல்களில் அடைத்து கொக்கட்டூஸ் பறவைகளைக் கடத்த முயன்றவர் கைது (Photos)

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 4:13 pm

அரிய வகையான கொக்கட்டூஸ் பறவைகளை தண்ணீர் போத்தல்களில் அடைத்து அதனைப் பயணப் பொதிக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்ற நபரை இந்தோனேசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் சுரபயா கப்பலில் இருந்து இறங்கியபோது 37 வயதான சந்தேகநபரைக் கைது செய்ததாகவும் அவரது பயணப் பொதிக்குள் 22 பறவைகள் போத்தல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் நிறக் கொண்டையுள்ள 21 கொக்கட்டூஸ் பறவைகளும் ஒரு பச்சைக் கிளியும் தண்ணீர் போத்தல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவை சுவாசிக்கும் வகையில் போத்தலின் நடுப்பகுதியில் வெட்டிவிடப் பட்டிருந்ததாகவும் அவை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் அல்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.

பறவைகளை இயற்கை வளத்துறை பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இரண்டு பறவைகளை மாத்திரம் தனது உறவினர் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்ததாகவும் ஏனையவற்றை போத்தலில் அடைத்து சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்நபருக்கு 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

CEUBuzfWEAA7oce

CONSERVATION060515e

6450254-3x2-700x467

6450266-3x2-700x467


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்