ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 8:34 pm

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் திங்கட்கிழமை வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லக்சதொச நிறுவனத்தின் நிதி மோசடி விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

லக்சதொச நிறுவனத்தில் 5 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியுடைய பொருட்களை பணம் செலுத்தாமல் பெற்றுக்கொண்டமை தொடர்பில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

எனினும், பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் லக்சதொசவில் இவ்வாறான கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது குற்றமல்ல என நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள இடம்பெறவுள்ளதுடன், அதுவரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லக்சதொசவின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்