ஜனாதிபதி மைத்ரிபால, மஹிந்த இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது : துமிந்த திசாநாயக்க

ஜனாதிபதி மைத்ரிபால, மஹிந்த இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது : துமிந்த திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 4:32 pm

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இருதரப்பு பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட உப தவிசாளர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்ததாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை முழுமையாக வெற்றியளித்துள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்