ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் வரத்தை மீறிச் செல்லமாட்டார் – சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் வரத்தை மீறிச் செல்லமாட்டார் – சஜித் பிரேமதாஸ

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 8:02 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் வரத்தை மீறிச் செல்லமாட்டார் என தான் நம்புவதாக வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் தெரிவித்ததாவது;

[quote]கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு அவருக்கு உரிமையில்லையா? அது பாரிய விடயமல்ல. நான் மைத்திரிபால சிறிசேனவை நம்புகின்றேன். யார் எதைச் சொன்னாலும் மைத்திரிபால சிறிசேன கீழ் மட்டத்திலிருந்து வந்து மக்களின் உள்ளங்களை வென்று உயர்ந்து வந்த ஒருவர். உடல் முழுவதும் நன்றிக்கடன் உள்ள ஒருவர் மைத்திரிபால என்பது எனக்குத் தெரியும். யார் எதைச் சொன்னாலும் மக்கள் வரத்தை மீறிச் செல்லமாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். எனது உயிரையும் விட நான் மைத்திரிபால சிறிசேனவை நம்புகின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்