சிரச வெசாக் வலயம்: புனித சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டன

சிரச வெசாக் வலயம்: புனித சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 9:59 pm

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாக புத்தபெருமானின் புனித சின்னங்கள் மற்றும் அவரது சீடர்களின் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு ப்ரேப்ரூக் பிளேஸில் உள்ள சிரச தலைமைக்காரியாலய வளாகத்தில் சிரச வெசாக் வலயம் அமைக்கப்பட்டிருந்தது.

சிரச வெசாக் வலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த புத்தபெருமானின் பிரதம சீடர்களான சரியுத் முகலனின் புனித சின்னங்கள் விசேட பூஜைகளின் பின்னர் இன்று எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த விசேட பூஜைகளில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மருதானை மாளிகாகந்த அக்ரஸ்ராவக விகாரைக்கு புனித சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தபெருமானின் புனித சின்னங்கள் மற்றும் 14 சீடர்களின் புனித சின்னங்கள் இன்று காலை கண்டி யட்டிஹலகல விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மகா சங்கத்தினரின் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜைகளின் பின்னர் புனித சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்