சல்மான் கான் இடைக்கால பிணையில் விடுதலை

சல்மான் கான் இடைக்கால பிணையில் விடுதலை

சல்மான் கான் இடைக்கால பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 5:19 pm

கார் விபத்து வழக்கில் 5 வருட சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான் இரண்டு நாட்கள் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சல்மான் கான் கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி நள்ளிரவு மும்பை பாந்திராவில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, மும்பை நீதிமன்றத்தில் கடந்த 12 வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், இன்று அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்