கிழக்கு மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 May, 2015 | 12:35 pm

கிழக்கு மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்ட 253 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில், 92 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக கடந்தமாதம் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் அறிவிடப்பட்டுள்ளதாக மாகாண நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.

மட்டக்களப்பில் 85 வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் இருந்து ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டதாக அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தில் 76 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலாவதியான பொருட்கள் விற்பனை, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டங்களை மீறும் வகையில் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிரான சுற்றிவளைப்புக்கள் தொடரும் எனவும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்