இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலய வீதியை மீட்டுத் தருவதாக டி.எம்.சுவாமிநாதன் வாக்குறுதி

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலய வீதியை மீட்டுத் தருவதாக டி.எம்.சுவாமிநாதன் வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 9:16 pm

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தின் கிழக்கு வீதியை மீட்டுத் தருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆலய நிர்வாகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் கிழக்கு பகுதி வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளமை தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மீள்குடியேற்ற அமைச்சர் அங்கு சென்றிருந்தார்.

இராணுவத்தினரின் பாவனையில் உள்ள கோவிலின் கிழக்கு வீதியை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

குறித்த பகுதி கோவிலிற்கு முக்கியமான பகுதி எனவும் அதனை கோவில் நிர்வாகத்தினரின் பொறுப்பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்