இன மத அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்படக் கூடாது – ஜனாதிபதி

இன மத அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்படக் கூடாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 9:28 pm

தேசிய பாடசாலை எனும் எண்ணக்கரு மாற்றப்பட வேண்டும் எனவும் இன மத அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்படக் கூடாது எனவும் நுகேகொடையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரியின் நூறு வருட நிறைவை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1915 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரியில் தற்போது 4000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்