சிரச வெசாக் வலயம்: புனித சின்னங்களை வழிபட இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது

சிரச வெசாக் வலயம்: புனித சின்னங்களை வழிபட இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2015 | 8:57 pm

சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இம்முறையும் சிரச வெசாக் வலயத்தை கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் பிரதம சீடர்கள் உள்ளிட்ட சீடர்களின் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புனித சின்னங்களை வழிபடுவதற்கு நேற்று பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

வெசாக் வலயத்தின் இறுதி நாளான இன்று புனித சின்னங்களை வழிபடுவதற்கு வெசாக் வலயம் அமைக்கப்பட்டுள்ள ப்ரேபுரூக் பிளேஸில் இன்று காலை முதல் பக்தர்கள் காத்திருந்தனர்.

இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணிக்கு புனித சின்னங்களை வழிபடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

கண்டி யட்டிஹலகல ரஜமகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் பிரதம சீடர்கள் 14 பேரின் புனித சின்னங்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கொழும்பு மாளிகாகந்த அக்ரஷாவக்க விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட சரியுத் முகலனின் புனித சின்னங்களும் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சிரச வெசாக் வலயத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களுக்காக நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு வரை திறக்கப்பட்டுள்ள வெசாக் வலயத்தில் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஶ்ரீமத் அநகாரிக தர்மபால போதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சோபன மாளிகய எனும் வாகனமும் இம்முறை சிரச வெசாக் வலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகர்கள் புத்தபெருமானின் பெருமையையும் வெசாக்கின் புனிதத்தையும் எடுத்தியம்பும் வகையில் பக்தி கீதங்களை சிரச வெசாக் வலயத்தில் பாடிவருகின்றனர்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிரச வெசாக் வலயத்தில் அலங்காரப் பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிரச வெசாக் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தலில் ஜாதகக் கதைகளும் சரியுத் முகலனின் கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பேலியகொட தயானந்த, ஆரியசிறி கொடிதுவக்கு மற்றும் சுசில் ஜயந்த ஆகிய கலைஞர்களே இம்முறை சிரச வெசாக் வலயத்தை நிர்மாணித்துள்ளனர்.

இதேவேளை, சிரச வெசாக் வலயத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இன்று மாலை 3 மணி வரை இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்