பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தாய்

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தாய்

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தாய்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 1:12 pm

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில், பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தாய் அந்த குழந்தையை உயிருடன் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.

குழந்தையின் அழு குரல் கேட்டு சிலர் அதை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அமிர்தசரஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்பவர் சம்பவத்தன்று வயல் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது குழந்தையின் அழு குரல் கேட்டுள்ளது, இதையடுத்து அவரும் கிராமத்தினரும் சேர்ந்து தேடிப் பார்த்தபோது ஒரு இடத்தில் குழிக்குள்ளிருந்தே அந்த குரல் கேட்டது தெரிய வந்தது.

தோண்டிப் பார்த்தபோது பிறந்த பெண் குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விரைந்து வந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது, தற்போது குழந்தையின் நிலை மேம்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தை பிறந்ததால் அதைக் கொல்லும் எண்ணத்தில் குழந்தையின் தாயார் உயிருடன் புதைத்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. பொலிஸார் அந்தப் பெண்ணைத் தற்போது தேடி வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்