சிரச வெசாக் வலயம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

சிரச வெசாக் வலயம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 7:34 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிரச  வெசாக் வலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு 02 பிரேபுறூக் பிளேஸில் அமைந்துள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிரச வெசாக் வலயத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான பக்தர்கள் வருகைதந்த வண்ணமுள்ளனர்.

புத்த பகவான் மற்றும் அவரது சீடர்களி்ன் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கண்டி யட்டிநுவர நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் மருதானை மாளிகாகந்த அக்ரஷ்ராவக்க மகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புனித சின்னங்களே பக்தர்களின் வழிபாடுகளுக்காக சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புத்தர் மற்றும் அவரது சீடர்களின் புனித சின்னங்கள் வெசாக் வலயத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில், ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டமை விசேட அம்சமாகும்.

புத்த பகவான் மற்றும் அவரது சீடர்களின் புனித சின்னங்களுடன், டிஜிட்டல் வெசாக் தோரணம், வெசாக் ஒளித் தோரணங்கள் காணப்படுவதுடன் பக்திப் பாடல் நிகழ்ச்சிகளும் வெசாக் வலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிரச வெசாக் வலயத்தை பார்வையிட வருபவர்களுக்காக அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிரச வெசாக் வலயம் நாளையும், நாளை மறுதினம் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்