சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 8:32 am

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியன இணைந்து நடத்தும் சிரச வெசாக் வலயம் இன்று (03) மாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு – 02, பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.ரீ.வி/ எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் “சிரச வெசாக் வலயம்”இன்று (03) மாலை ஆரம்பிக்கப்பட்டு நாளை மறுதினம் (05) வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்