உலக குத்துச்சண்டை வீரர் மெனி பிக்காயோவை அமெரிக்காவின் ப்ளொயிட் மேவெதர் வீழ்த்தினார்

உலக குத்துச்சண்டை வீரர் மெனி பிக்காயோவை அமெரிக்காவின் ப்ளொயிட் மேவெதர் வீழ்த்தினார்

உலக குத்துச்சண்டை வீரர் மெனி பிக்காயோவை அமெரிக்காவின் ப்ளொயிட் மேவெதர் வீழ்த்தினார்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 5:57 pm

உலக குத்துச்சண்டை பிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்த குத்துச்சண்டை கோதாவில் பிலிப்பைன்ஸின் மெனி பிக்காயோவை அமெரிக்காவின் ப்ளொயிட் மேவெதர் வீழ்த்தினார்.

இந்த நூற்றாண்டின் அதிசிறந்த வீரர்கள் மோதும் கோதாவாக இந்தக் குத்துச்சண்டை காணப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இலங்கை நேரப்படி இன்று காலை 8 மணியளவில் இந்தக் கோதா நடைபெற்றது.

இதற்கு முன்னர் 47 கோதாக்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றிருந்த அமெரிக்காவின் ப்ளொயிட் மேவதர் தோல்வியடையாத வரலாற்றை தக்கவைத்துக் கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் இந்தக் கோதாவில் களமிறங்கினார்.

ஆசியாவிலும், உலகளாவிய ரீதியிலும் பிரசித்திபெற்ற வீரரான பிலிப்பைன்ஸின் மெனி பிக்காயோ உலகின் அதிசிறந்த குத்துச்சண்டை வீரராகப் பதிவாகும் எதிர்ப்பார்ப்புடன் இந்தக் கோதாவை எதிர்கொண்டார்.

கோதா 12 சுற்றுகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.

கோதாவில் மெனி பிக்காயோ சிறப்பாக செயற்பட்ட போதிலும் மேவெதர் தற்காப்புடன் விளையாடி கோதாவை வெற்றிகொண்டார்.

அதற்கமைய தோல்வியடையாத வீரர் எனும் சிறப்பை மேவெதர் தக்கவைத்துக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்