உமா ஓயாத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை பூர்த்தி

உமா ஓயாத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை பூர்த்தி

உமா ஓயாத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

03 May, 2015 | 5:24 pm

உமா ஓயாத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை, அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.

உமா ஓயாத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட சூழலியல் விடயங்கள் தொடர்பான அறிக்கையும், நிபுணர்களின் அறிக்கையும் அமைச்சரவை உப குழுவினால் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்பின்னர், உப குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டினார்..

உமா ஓயா தொடர்பில் கண்டறிவதற்கான நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கு, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமைத்துவம் வகிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்