ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 6:55 pm

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

25 ஆயிரம் ரூபா மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் நேற்று வழங்கப்பட்டன.

அதன்பிரகாரம் குருநாகல் நீதவான் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

லக் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கீழ், கடந்த 5 ஆம் திகதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

இன்று பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து குருநாகல் நகர் வரை பேரணியாகச் சென்றார்.