மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பமாகச் செலுத்துகின்றோம் – கெமுனு விஜேரத்ன

மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பமாகச் செலுத்துகின்றோம் – கெமுனு விஜேரத்ன

மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பமாகச் செலுத்துகின்றோம் – கெமுனு விஜேரத்ன

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2015 | 10:45 am

மாதாந்தம் 17 கோடி ரூபாவை கப்பம் பெறுவோருக்கு செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதுதொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்திய போதிலும், நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

பஸ் நிறுத்துமிடங்கள், பஸ் தரித்து நிற்கும் பகுதிகள், பஸ் மார்க்கங்கள் என்பவற்றில் கப்பம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை தடுப்பதற்கு மாகாணகள் மட்டத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தமக்கு சிறந்த பதில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்