காலியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

காலியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

காலியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2015 | 1:07 pm

காலி ஹபராதுவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்ட நிலையத்தில் இருந்து 28 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் மொன்டரோ ஜீப் ஒன்றும், இரண்டு கார்களும், வேனொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சூதாட்ட நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்