19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம்

19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம்

19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் மேலும் சரத்துக்கள் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 10:44 am

19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து இந்த சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆரம்பத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பின்னர் மேற்கொண்ட திருத்தங்களிலே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா சபையில் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்த சர்த்துக்கள் நீக்கப்பட்டதாக அவர் சபையில் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்