19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 7:45 pm

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான விவாதம் இன்று (27) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

விவாதத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இதற்கு ஆதரவை தெரிவிக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்த விவாதத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்று காலை 10.11 மணிக்கு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

இதேவேளை கடந்த தேர்தல்களை எடுத்து கொண்டால் 58 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கிடைத்தன, எனக்கு 62 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன, இந்த 2 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மிக தெளிவாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே 2 வேட்பாளர்களுக்கும் வாக்களித்த 120 இலட்ச மக்களுக்கும் இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொது இணக்கப்பாடு உள்ளது. ஆகவே இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்தர்பத்தில் அந்த வரலாற்று முக்கியத்துவமான கௌரவம் இந்த சபையை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் என்பதை நான் விஷேடமாக கூற வேண்டும் என இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்