19 ஆவது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு கோரி பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்

19 ஆவது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு கோரி பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 8:44 pm

19 ஆவது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்து இன்று (27) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.

மக்கள் ஆணைக்கு தலைசாயுங்கள், 19 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றுங்கள் என தெரிவித்து இந்த பேரணி ராஜகிரிய ஆயுர்வேத சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமானது.

மகா சங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள் , சிவில் சமூகத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

முன்னொக்கி வந்த பேரணியை பாராளுமன்ற வீதிக்கு 200 மீற்றர் தூரத்தில் பொலிசார் நிறுத்தினார்கள்.

இதேவேளை பேரணியாக வந்தவர்கள் மீண்டும் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்