முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 6:08 pm

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மே மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கான தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

மனுக்கள் மீதான விசாரணையும் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்