நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 3700 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 3700 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 3700 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 9:02 pm

நேபாளத்தில் இடம்பெற்றுள்ள பூகம்பங்கள் காரணமாக சுமார் 3700 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட நேபாளம், பல்வேறுப்பட்ட இன்னல்களை எதிர்நோக்கியுள்ளது.

நொடிக்கு நொடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

உடைந்து வீழ்ந்துள்ள கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவிற்கு அண்மித்த பகுதியில் நேற்று (27) நள்ளிரவு பாரிய அதிர்வு உணரப்பட்டுள்ளது.

4.2 ரிச்சட் அளவில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.

கத்மண்டுவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹிதுரா எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த பூகம்பத்தினால் சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதியில் இருந்து நேபாளத்தில் பாரிய 4 பூகம்பங்கள் இடம்பெறுள்ளன.

அதன் காரணமாக நேபாளமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

உறவுகளையும், உடமைகளுக்கும் இழந்து குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் மக்கள் தவிக்கின்றனர்.

இடிபாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூகம்பம் காரணமாக சுமார் 7000 பேர் காயமடைந்துள்ளனர்.

கத்மண்டுவில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நேயாளர்கள் நிரம்பியுள்ளமையினால் வெளி இடங்களிலும் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அத்துடன் பூகம்பம் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சில நகரங்களில் 70 வீதமான வீடுகள் அழிவடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூகம்பத்தினால் நேபாளத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

எவரஸ்ட் சிகரம் குறித்து வெளிநாட்டவர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் எவரஸ்ட் சிகரத்திற்கு உணரப்பட்டமை தொடர்பான காணொளிகளை இணையத்தளங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எவரஸ்ட் சிகரத்தைப் பார்ப்பதற்காக சுற்றுலா சென்றிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தக் காட்சியை ஔிப்பதிவு செய்திருந்தார்.

இதன்போது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிவாரணக் குழுக்கள் அங்கு நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கையில் இருந்து நேபாளம் சென்றுள்ள நிவாரணக் குழுவில் முப்படையின் உறுப்பினர்களும், மருத்துவ நிபுணர்களும் அடங்குகின்றனர்.

மற்றுமொரு நிவாரணக் குழு நாளை மறுதினம் (29) நேபாளம் நோக்கி பயணிக்கவுள்ளது.

இதேவேளை நேபாளத்தின் பொகாரா பிராந்தியத்தில் உள்ள மெனிபொல் மருத்துவ கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களையும், தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்ட 14 வயதிற்கு கீழான இலங்கை அணியின் வீரர்கள் உள்ளிட்ட 140 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்காக எதிர்வரும் புதன் கிழமை இலங்கையில் இருந்து விமானம் ஒன்று நேபாளத்தை அடையவுள்ளது.

தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் 077 74 89 787 எனும் இலக்கதுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த நிவாரண குழுக்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளன.

இதன்படி, இலங்கையிலிருந்தும் நிவாரண குழுவொன்று ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அங்கு சென்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்