தனது மகளுக்கு இந்தியா என பெயரிட்டமைக்கான காரணத்தை வௌியிட்ட ஜொன்டி ரோட்ஸ்

தனது மகளுக்கு இந்தியா என பெயரிட்டமைக்கான காரணத்தை வௌியிட்ட ஜொன்டி ரோட்ஸ்

தனது மகளுக்கு இந்தியா என பெயரிட்டமைக்கான காரணத்தை வௌியிட்ட ஜொன்டி ரோட்ஸ்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 11:10 am

தென்னாபிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த களத்தடுப்பாளருமான ஜொன்டி ரோட்ஸ்-மெலானி தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான காரணத்ததை ரோட்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் காணப்படும் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் காணப்படுகின்றமையே இவ்வாறு பெயரிட்டமைக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் வசதிகள் குறைவு என்ற காரணத்தினால் மும்பை மருத்துவமனையில் மனைவியை அனுமதித்திருந்தார் ரோட்ஸ். இந்நிலையில் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இதற்கு முன்னர் லாராவும் தனது மகளுக்கு சிட்னி என பெயலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்