சதமடித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்த குசல் பெரேரா

சதமடித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்த குசல் பெரேரா

சதமடித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்த குசல் பெரேரா

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 11:45 am

இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான உத்தியோகப்பற்றற்ற முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் மாத்தறை உயன் வட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏ அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். இதன்படி பாகிஸசதான் அணியினர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அணி சார்பில்  பவாட் அலம் மாத்திரம் அரைச்சதமடித்து 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை ஏ அணி சார்பாக பந்துவிச்சில் சமீர 3 விக்கெட்டுக்களையும், கமகே, ஜயசூரிய மற்றும் கௌசால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணியினர் 32.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் குசல் பெரேரா 88 பந்துகளில் 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அத்துடன் அசான் பிரியஞ்ன் 57 ஓட்டங்களைப் பெற்றுக்ககொண்டார்.

இரண்டாவது போட்டி 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்