கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பிராந்திய நுழைவாயிலின் முதற்கட்டம் இன்று திறந்து வைப்பு

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பிராந்திய நுழைவாயிலின் முதற்கட்டம் இன்று திறந்து வைப்பு

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பிராந்திய நுழைவாயிலின் முதற்கட்டம் இன்று திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 9:27 am

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பிராந்திய நுழைவாயிலின் முதற்கட்டம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த நுழைவாயில் 1200 மீற்றர் நீளம் கொண்டதாகும்.

இதன் முதற்கட்டமாக 400 மீற்றர் தூரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கப்பல் துறை மற்றும் துறைமுகங்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த நுழைவாயிலைத் திறந்து வைக்கும் அதேவேளை சம்பிரதாய பூர்வமாக சீனாவின் சரக்குக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயிலை அண்மிக்கவுள்ளது.

இந்தப் பகுதி இலங்கையின் மிக ஆழமாக பகுதி என்பதோடு இதன் ஆழம் 18 மீற்றராகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட நிரமாணத்திற்காக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை 80 மில்லியன் அமெரி்க்க டொலர்களை செலவிட்டுள்ளதாக கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்