ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி

ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி

ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 8:34 am

நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை போன்று ஊடக சுதந்திரத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் மாத்தளை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதே வேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

19 அரசியலமைப்பு திருத்தத்திற்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு முதலாவதாக எதிர்ப்பை தெரிவித்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஜனநாயகத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்தி வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்ததாக ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்