ஊடகவியலாளர்களை குற்றவியல் குற்றச்சாட்டில் சிறைவைக்க முடியும் என்ற சரத்தை நீக்குவதாக அறிவிப்பு

ஊடகவியலாளர்களை குற்றவியல் குற்றச்சாட்டில் சிறைவைக்க முடியும் என்ற சரத்தை நீக்குவதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 7:34 pm

ஊடகவியலாளர்களை குற்றவியல் குற்றச்சாட்டில் சிறைவைக்க முடியும் என்ற சரத்தை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து நீக்குவதாக பாராளுமன்றத்தில் இன்று (27) அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் குழு நிலை விவாத்தின் போது முன்வைக்கப்பட்ட மாற்றங்களில் , ஊடகவியலாளர்களை குற்றவியல் குற்றச்சாட்டின் பிரகாரம் சிறை வைக்க முடியும் என்ற சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளமையை நியூஸ்பெஸ்ட் கடந்த நாட்களில் சுட்டிக்காட்டியது.

அதில் 28 ஆவது சரத்தில் காணப்படுவது தேர்தலின் போது அல்லது மக்கள் கருத்து கணிப்பின் போது தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்படுகின்ற பரிந்துரைகளுக்கு அமைவாக செயற்படாத தனியார் ஊடகங்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது 3 வருடம் சிறை தண்டனை வழங்க முடிவதுடன் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்திற்கும் உட்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்