இந்திய வீடமைப்புத் திட்டத்தில் தமக்கான வீடு வழங்கப்படவில்லை என முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் தமக்கான வீடு வழங்கப்படவில்லை என முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் தமக்கான வீடு வழங்கப்படவில்லை என முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 7:54 pm

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் தமக்கான வீடு வழங்கப்படவில்லை எனவும்
அவற்றை விரைவாக பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையளிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்