ஹபரணையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஹபரணையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஹபரணையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 1:49 pm

ஹபரண பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபரண கல்பிட்டிய பகுதியில் இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

வயலில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 37 வயதான நாலக்க சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்