ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 5:57 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு இன்று ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிங்கிரிய தொகுதியின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லன்சா வத்தளை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை நகர மேயர் இந்திக்க நலீன் ஜயவிக்ரம, அம்பாறை தென்பகுதி அமைப்பாளராகவும், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் உதயகாந்த் குணதிலக்க மற்றும் வரகாபொல பிரதேச சபைத் தலைவர் கித்சிறி விஜேதுங்க ஆகியோர் தெதிகம தொகுதி இணை அமைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்