விடுவிக்கப்பட்ட படகுகளை பழுதுபார்க்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர் குழு

விடுவிக்கப்பட்ட படகுகளை பழுதுபார்க்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர் குழு

விடுவிக்கப்பட்ட படகுகளை பழுதுபார்க்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர் குழு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 10:43 am

இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகளை பழுதுபார்க்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர் குழு ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட படகுகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக 123 பேர் கொண்ட மீனவர் குழு தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சில தினங்கள் நாட்டில் தங்கியிருந்து அவர்கள் தமது படகுகளை பழுதுபார்த்ததன் பின்னர் படகுகளுடன் நாடு திரும்புவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் காரைநகர் மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் உள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்