யாழில் கைதான பல்கலைக்கழக மாணவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

யாழில் கைதான பல்கலைக்கழக மாணவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

யாழில் கைதான பல்கலைக்கழக மாணவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 7:58 am

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) மாலை ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணத் திருட்டு மற்றும் அயலவருடன் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும், பிராந்திய செய்தியாளர் ஒருவரும் உள்ளிடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்