மெக்கா – மதீனா இடையே அதிவேக ரயில் சேவை : மணிக்கு 300 கி.மீ பயணம்

மெக்கா – மதீனா இடையே அதிவேக ரயில் சேவை : மணிக்கு 300 கி.மீ பயணம்

மெக்கா – மதீனா இடையே அதிவேக ரயில் சேவை : மணிக்கு 300 கி.மீ பயணம்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 3:47 pm

சவுதி அரேபியாவில் ஹரமைன் என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவையின் பணிகள் ஏறத்தாழ இறுதிக் கட்டத்தை அடைந்து விரைவில் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.

இதன் மூலம் இரு புனித நகரங்களுக்கு இடையே 90 நிமிடங்களில் பயணம் செய்யலாம்.

இந்த ரயில் பாதையின் தூரம் 453 கிலோமீட்டராகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஆண்டுக்கு 30 இலட்சம் மக்கள் இந்த ரயில் தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து சவுதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு மிகவும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்